பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாடல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இத்திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.
தற்பொழுது இத்திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளார்கள். அதன்படி ஹைதராபாத்தில் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலர் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.