தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து பல்வேறு துறைகளிலும் தேர்தல் காலங்களில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும் பள்ளிக்கல்வித்துறையில் சொல்லிக் கொள்ளும் வகையில் பெரிதாக எந்த ஒரு வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டு ஆசிரியர்கள் மத்தியில் நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. இல்லம் தேடி கல்வி, எமிஸ் இணையதள பதிவுகள் என பணி சுமை தான் நாளைக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதாக வேறு ஏதும் நடந்தபாடி இல்லை என்று பள்ளி ஆசிரியர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
சமீபத்தில் கூட வேலை பளுவால் ஆசிரியர் ஒருவர் கண்ணீர் விடும் வீடியோ இணையதளத்தில் வைரலானது. எனவே கூடுதலாக ஆசிரியர்களுக்கு எதையும் வாரி வழங்காவிட்டாலும் தேர்தலின் போது அளித்த வாக்குறுதி வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வருகிற பத்தாம் தேதி ஜாக்டோஜியா நடத்தும் ஆசிரியர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் பங்கேற்க இருக்கிறார். அதே சமயம் இந்த மாநாட்டில் யாரும் தமிழக முதல்வர் முன்னிலையில் மனக்குறையை கொட்டிட விடக்கூடாது என்பதிலும் பள்ளிக்கல்வித்துறை தெளிவாக இருக்கிறது.
தொடர்ச்சியாக இந்த மாநாட்டிற்கு முன்னதாகவே ஆசிரியர்கள் வலியுறுத்தும் கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அல்லது மாநாட்டில் அறிவிக்க செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை செயல்படுத்தும் விதமாக தமிழக நிதி அமைச்சரை சந்தித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.