மின்னல் தாக்கியதால் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நடராஜபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வயலில் களை பறிக்கும் பணியில் மாரிமுத்து, பாலேஸ்வரி, வள்ளியம்மாள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
இந்நிலையில் பாலேஸ்வரி, முத்துமாரி, வள்ளியம்மாள் ஆகியோரை மின்னல் தாக்கியது. இதனால் மூன்று பேரும் மயங்கி விழுந்துவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே பாலேஸ்வரி, முத்துமாரி ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.