Categories
தேனி மாவட்ட செய்திகள்

கள்ளகாதலி வற்புறுத்தியதால்…. போலீஸ் செய்த கொடூர செயல்…. தேனியில் பரபரப்பு….!!

திருமணம் செய்து கொள்ளுமாறு கள்ளகாதலி வற்புறுத்தியதால் காவல்துறை அதிகாரி பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியில் திருமுருகன் என்பவர் வசித்து வருகிறார். ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று கீரைத்துறை காவல் நிலையத்திற்கு சென்று அதிகாரிகளிடம் தான் ஒரு பெண்ணை கொலை செய்துள்ளதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் திருமுருகனிடம் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் போடி அருகே வனத்துறை அலுவலகம் பகுதியில் வசிக்கின்ற வனக்காவலர் சரண்யா என்ற பெண்ணை திருமுருகன் கொலை செய்தது தெரியவந்தது. இதனை அறிந்த கீரைத்துறை காவல்துறையினர் போடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிருந்து போடி காவல்துறையினர் சரண்யாவின் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது படுக்கை அறையில் அவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.  இதனையடுத்து காவல்துறையினர் சரண்யாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சரண்யாவின் கணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சரண்யா தனது 2 மகள்களை தன் பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சரண்யா தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது சரண்யாவிற்கும், திருமுருகனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த தொடர்பு திருமுருகனின் மனைவிக்கு தெரியவந்த நிலையில் அவர் கோபித்துகொண்டு கணவரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் சரண்யா தன்னை திருமணம் செய்து கொள்ளசொல்லி திருமுருகனை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று திருமுருகன் சரண்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த திருமுருகன் சரண்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து திருமுருகன் கீரைத்துறை காவல் நிலையத்திற்கு சென்று தானாகவே சரணடைந்துள்ளார். இதனை அறிந்த போடி காவல்துறையினர் திருமுருகனை  போடிக்கு அழைத்து சென்று கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |