Categories
தேசிய செய்திகள்

கள்ளகாதல் விவகாரம்… திட்டம்போட்டு கண்ணில் மிளகாய் பொடி தூவி… தம்பியையே கொலை செய்த கொடூர அண்ணன்..!!!

மைசூர் அருகே விவசாயி கொலை சம்பவத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் அண்ணன் தீர்த்துக் கட்டியது அம்பலமாகியுள்ளது.

மைசூர் மாவட்டம் பாடகா கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. விவசாயியான இவர் கடந்த 17ஆம் தேதி இவருடன் தனது தோட்டத்தில் பருத்தி பறிக்கச் சென்றுள்ளார். மாலை வந்துவிடுவதாக கூறிச்சென்ற குருசாமி இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை., இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு குருசாமி கண்ணில் மிளகாய் பொடியை தூவி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இந்நிலையில் போலீஸ் நிலையத்திற்கு அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு வந்து விசாரணை நடத்திய போலீசார் குருசாமியின் அண்ணனாகிய மகாதேவ சாமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்தன. அதன்படி குருசாமி அவரது அண்ணன் மகாதேவி சாமிக்கும் இடையே கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாகவும், இதனால் மகாதேவ சுவாமி தன் தம்பியை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டி தோட்டத்தில் தனியாக வேலை செய்து கொண்டிருந்த குரு சாமி அருகில் சென்று கண்ணில் மிளகாய் பொடியை தூவி, துண்டால் குருசாமியின் கழுத்தை இறுக்கி கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Categories

Tech |