Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளகுறிச்சியில் நாளை மீண்டும் போராட்டம்…..? டிஜிபி எச்சரிக்கை…..!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து  மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஐந்து நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக நாளை போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாகவும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்ட காவலர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |