Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுக்கு மகளை விருந்தாக்கிய தாய்…. 3 மாதங்களாக அரங்கேறிய கொடூரம்….. போலீஸ் அதிரடி…!!

சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமியின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பாக முதுகு தண்டுவட பிரச்சனையால் வீட்டிலேயே படுத்த படுக்கையாய் முடங்கியுள்ளார். இதன் காரணமாக சிறுமியின் தாய் புதுக்கடை பகுதியில் இருக்கும் ஒரு மரக்  கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது கடை உரிமையாளர் ராஜையன் என்பவருக்கும் சுனிதாவிற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ராஜையன்  அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வருவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில் ராஜையன் வழக்கம்போல் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் வீட்டில் இல்லாததால் ராஜையன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்ந்து 3 மாதங்களாக அரங்கேறி வந்துள்ளது. இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் கூறியுள்ளார். ஆனால் மாணவியின் தாயார் கண்டுகொள்ளவில்லை. இந்த சம்பவம் குறித்து ஒருவர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து குழந்தைகள் நல அலுவலர்  குளச்சல் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜையன் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய  2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |