Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் இருந்த மனைவி…. வெடிகுண்டு தயாரித்த கணவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொலை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள துரைப்பாக்கம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. இவரை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் மாம்பாக்கம் பகுதியில் வசிக்கும் சேகர் என்பவர் கிருஷ்ணமூர்த்தியின் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார்.

இதனால் இருவரையும் கொலை செய்யும் நோக்கத்தோடு கிருஷ்ணமூர்த்தி பெருங்குடியில் இருக்கும் வீட்டில் வைத்து தனது கூட்டாளிகளுடன் இணைந்து நாட்டு வெடிகுண்டை தயாரித்துக் கொண்டிருந்தார். இதனை அடுத்து தனிப்படை காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தி, ராஜன், பார்த்திபன், ஜெகன், ராஜா ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |