Categories
தேசிய செய்திகள்

“குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை”… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரளாவில் சமூக வலைத்தளத்தில் பழகிய நண்பருடன் செல்வதற்காக பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள சாத்தனூர் என்ற பகுதியில் குப்பை தொட்டியிலிருந்து பிறந்து சில மணி நேரம் ஆன குழந்தை ஜனவரி மாதம் 4-ஆம் தேதி மீட்கப்பட்டது. அந்தக் குழந்தையை வீசி சென்றது யார்? அது யாருடைய குழந்தை என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த உடலை பரிசோதனைக்கு பாரிப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அந்த குழந்தையை கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தையை யார் கொலை செய்தார்கள்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்தனர். மேலும் இவற்றை கண்டுபிடிப்பதற்காக டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அந்த குழந்தை சாந்தனு அருகே உள்ள வேலுவிளைவு பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி ரேஷ்மா (வயது21) என்பவருக்கு பிறந்தது என்பது தெரியவந்தது. பின்னர் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. திருமணமான அந்தப் பெண்ணுக்கும், மற்றொரு வாலிபரும் சமூக வலைத்தளத்தில் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த வாழ்க்கைக்கு குழந்தை இடையூறாக இருக்கும் எனக்கருதி, பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்றேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் பழகிய வாலிபருடன் செல்வதற்காக பெற்ற குழந்தையை தாயே கொலை செய்து பின்னர் குப்பைத்தொட்டியில் வீசி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |