Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை திட்டமிட்டு கொன்ற மனைவி ..!மாட்டிக்கொண்ட 23 வயது இளைஞர்…!!!

 டெல்லி மாநகரின் கணவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அவரது மனைவி மற்றும் 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தெற்கு டில்லியில் ராணுவ காலனி பகுதியை சேர்ந்த பஸ் டிரைவர்  பீம்ராஜ் (வயது 45) இவர் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு காரில்  அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த ஒருவர் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ,துப்பாக்கியால் தாக்கப்பட்டதில்  அவர் கழுத்தில் குண்டு பாய்ந்தது. உடனே இவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்  அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அந்த மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கமலா நகரை சேர்ந்த லகான் என்பது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போலீசார், கோவிந்தபுரி பகுதியை சேர்ந்த ரோகன் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வாங்கியது தெரிந்தது. இதனால் ரோகனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது, சாலையில் வாகனம் ஓட்டிய போது ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் ரோகன் கூறியுள்ளார். விசாரணையில் போலீசார் அவரது செல்போனை சோதனை  செய்தபோது  பீம்சிங் மனைவி 41 வயதுடைய பபிதா உடன் பழக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி போலீசார் விசாரித்ததில் , கடந்த 4 மாதங்களாக ரோகனுக்கும், பபிதாவுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது தெரிந்தது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட கணவன் பீம்ராஜ் மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதன் காரணமாக கணவனை கொன்று விடுமாறு ரோகனிடம் கூறியுள்ளார். இதனால் இருவரும் திட்டமிட்டு கொலை செய்தது  போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனடிப்படையில் மனைவி பபிதா  மற்றும் ரோகனை போலீஸ் கைது செய்தது.

Categories

Tech |