கண்டக்டரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் அரசு பேருந்து கண்டக்டரான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இதனை அடுத்து அந்த பெண்ணின் மகளான 16 வயது சிறுமியை ராதாகிருஷ்ணன் திருமணம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி ராதாகிருஷ்ணன் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான நகலை சிறையில் இருக்கும் சிறுமியின் தாய் மற்றும் ராதாகிருஷ்ணனுக்கு சிறை அலுவலர்கள் வழங்கியுள்ளனர்.