Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண்… மர்ம முறையில் இறப்பு… தந்தை போலீசில் புகார்…!!!

கள்ளக்காதலுடன் வாழ்ந்த பெண் மர்ம முறையில் உயிரிழந்தது குறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகில் பண்ணப்பட்டியில் வசித்து வருபவர் ரமணி. இவருடைய மகள் செல்வி என்பவருக்கு ஓமலூர் அருகில் கள்ளிக்காடு பகுதியில் வசித்து வந்த விஜயன் என்பவருடன் கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள்.

இந்நிலையில் செல்விக்கு தாரமங்கலம் பகுதியில் வசித்த தொழிலாளி ஸ்ரீதர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் கள்ளக்காதலாக மாறி அவர்கள் 2 பேரும் தாரமங்கலம் அருகில் சேடப்பட்டியில் தனியாக வீடு எடுத்து கடந்த 5 வருடங்களாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வி திடீரென்று வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த செல்வியின் தந்தை ரமணி தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தாராமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |