கள்ளக்காதலனை சந்திக்க சென்ற பெண்ணை கணவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேடரப்பள்ளி பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் வெல்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெல்டரின் மனைவிக்கும், தனியார் கேஸ் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்க்கும் ஒரு நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இந்த பெண் தனது தோழி வீட்டில் வைத்து கள்ளக்காதலனை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.
இதனை அறிந்த வெல்டர் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த பெண்ணை அருகில் உள்ளவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஓசூர் சிப்காட் காவல்துறையினர் வெல்டரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.