Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் நடந்த கொலை…. 22 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய குற்றவாளி…. போலீஸ் நடவடிக்கை…!!

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை 22 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கொம்பாடிபட்டி பகுதியில் வசித்த கொத்தனாரான சுரேந்திரன் என்பவர் கடந்த 1999-ஆம் ஆண்டு குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சுபாஷ், மூர்த்தி, கணேசன், பாலு ஆகிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர். அதாவது மூர்த்திக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது.

இதனை சுரேந்திரன் கண்டித்ததால் மூர்த்தி தனது நண்பர்களுடன் இணைந்து சுரேந்திரனை கொலை செய்துள்ளார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மூர்த்தியை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு  தனது தாயை பார்க்க சென்ற மூர்த்தியை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

Categories

Tech |