மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள அலங்காநத்தம் பாலப்பட்டி கிராமத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு லதா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று எருமப்பட்டி அருகே புதுக்கோட்டை இருந்து தூசூர் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் அருகே செந்தில்குமார் கழுத்து மற்றும் மர்ம உறுப்புகள் அறுக்கப்பட்ட நிலையிலும், உடல் பாதி எரிந்த நிலையிலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக எருமப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செந்தில் குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் செந்தில்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே கள்ளத் தொடர்பினால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதாவது காரணமா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.