Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கள்ளக்காதலி எரித்து கொலை…. வியாபாரியின் பரபரப்பு வாக்குமூலம்….. போலீஸ் விசாரணை….!!!

ஜவுளி வியாபாரி கள்ள காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் ஜவுளி வியாபாரியான ரமேஷ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திலகவதி(38) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் ரமேஷ் திலகவதியை தனிமையில் சந்திப்பதற்காக முள்ளிபாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். நேற்று முன்தினம் காலை ரமேஷை பார்ப்பதற்காக திலகவதி அங்கு சென்ற போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ரமேஷ் திலகவதியின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த போது எதிர்பாராதவிதமாக ரமேஷின் உடலிலும் தீ பற்றியது.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் இருந்த இருவரையும் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திலகவதி பரிதாபமாக இறந்துவிட்டார். ரமேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திலகவதிக்கு இரண்டு மகள்கள் இருப்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமண வயது வந்ததால் இனிமேல் தனியாக சந்திக்க வேண்டாம் எனவும், கொள்ளகாதலை கைவிடும் படியும் திலகவதி தெரிவித்துள்ளார்.

அதற்கு உன்னால் தான் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன். இப்போது கள்ளக்காதலை கைவிடும்படி கூறினால் என்னால் எப்படி வாழ முடியும் என ரமேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் ரமேஷ் திலகவதி மீது தீ வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். அதற்குள் ஓடி சென்று கதவை பூட்டிவிட்டு திலகவதி ரமேஷை கட்டி பிடித்ததால் அவர் மீதும் பற்றியது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |