மனைவி ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கிம், சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த தம்பதிகள் பிரதீப் – ரோகிணி. இவர்களுக்கு 10 மற்றும் 7 வயதில் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீப் திடீரென்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவருடைய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவருடைய மனைவியான ரோகிணியை விசாரித்தத்தில், அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்து வந்துள்ளார்.
மேலும் பிரதீப்பின் வாயிலிருந்து ரத்தம் மற்றும் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் ரோகிணியை காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ரோகிணி மற்றும் அவரின் கள்ளக்காதலன் சேர்ந்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “ரோகிணிக்கும், பிரதீப்புக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
பிரதீப்புக்கு குடிப்பழக்கம் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து பிரதீப்பின் நண்பர் சீனிவாசன் ரோகிணியின் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது ரோகிணி மற்றும் சீனிவாசன் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை பிரதீப் கண்டித்து வந்ததால், அவர்களின் கள்ளக்காதலுக்கு பிரதீப் இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து ரோகினி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.