Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலுடனுன் ஓட்டம் பிடித்த மனைவி…. புகார் கொடுத்த கணவர்…. பின் நடந்த சம்பவம்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையில் வசித்து வரும் மீனவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் தூத்துக்குடியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அந்த இளம்பெண் பாறசாலையிலுள்ள ஒரு உறவினரிடம் நீண்டநேரம் செல்போனில் பேசி வந்தார். இப்பழக்கம் அவர்கள் இடையில் கள்ளக்காதலாக மாறியது. இதனை மீனவர் கண்டித்தார். இதன் காரணமாக இளம்பெண் கணவருடன் அடிக்கடி சண்டை போட்டுவிட்டு தூத்துக்குடியிலுள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிடுவார். இதையடுத்து மீனவர் தூத்துக்குடிக்கு சென்று இளம்பெண்ணை சமாதானம் செய்து ஊருக்கு அழைத்து வருவது வழக்கம் ஆகும்.

இதனிடையில் மீனவர் சென்ற சில நாட்களுக்கு முன் மீன்பிடிப்பதற்காக நாகை மாவட்டம் சென்றார். அங்கு ருந்து மனைவியை தொடர்புக்கொண்டு பேசியபோது, அவர் நான் பாறாசாலையை சேர்ந்த உறவினருடன் செல்கிறேன் என கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார். அதன்பின் உடனே மீனவர் வீடு திரும்பிவந்து பார்த்தபோது அங்கு குழந்தையுடன் மனைவி மாயமாகி இருந்தார். இது தொடர்பாக மீனவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணையும், குழந்தையையும் தேடி வந்தனர். இந்நிலையில் இளம்பெண் கோவையில் கள்ளக்காதலனுடன் தங்கி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அதனை தொடர்ந்து உடனே காவல்துறையினர் கோவைக்கு சென்று இளம்பெண்ணையும், குழந்தையையும் மீட்டு நேற்று காலையில் குளச்சல் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதனிடையே காவல்துறையினர் வருவதை அறிந்ததும் கள்ளக்காதலன் தப்பிஓடிவிட்டார். பின் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இளம்பெண்ணிடம், கணவருடன் செல்லுமாறு அறிவுரை கூறினர். எனினும் அவர் கணவருடன் செல்ல மறுப்பு தெரிவித்தார். காவல்துறையினர் பலமுறை எடுத்து கூறியும் இளம்பெண் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தார். அதன்பிறகு இருவரையும் காவல்துறையினர் கவுன்சிலிங்கிற்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் குளச்சல் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |