கர்நாடக மாநிலம் ராய்ப்பூரில் சேர்ந்தவர் பசவராஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஜோதி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கள்ள காதலை கைவிடும்படி ஜோதியை அவர்களது குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர். ஆனாலும் கள்ளக்காதலை கைவிட மறுத்து விட்டனர். கடந்த 20 நாட்களுக்கு முன்னர் பசவராஜ், ஜோதியும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
இதையடுத்து 2 பேரும் பெங்களூருவுக்கு வந்தனர். அதன் பின்னர் பெங்களூரில் ஒரு வாடகை வீட்டில் 2 பேரும் வசித்து வந்துள்ளனர். வீட்டு உரிமையாளர் அக்கம்பக்கத்தினரிடம் 2 பேரும் கணவன்- மனைவி என்று கூறி வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து பசவராஜ்-ஜோதி உடல் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர். பின்னர் அவர்களது உடல்களை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.