Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் ஜோடியை… அவமானப் படுத்தியதால்… மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட ஜோடி…!!!

மகுடஞ்சாவடியில் கள்ளக்காதல் ஜோடி , குடும்பத்தினர் அவமானப்படுத்தியதால் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

சேலம் மாவட்டத்தில் மகுடஞ்சாவடி பகுதிக்கு அடுத்துள்ள கூடலூரை  சேர்ந்த 26 வயதுடைய  சேகர். இவர் காக்காபாளையம் பகுதியை சேர்ந்த ,சுமதி என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கிஷோர் என்ற மகனும் (வயது 3)  மற்றும் சுரேந்திரன் என்ற  8 மாத குழந்தையும்  உள்ளது. இந்நிலையில் சேகர் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். அதே  பகுதியை சேர்ந்த கோமதி (வயது 30 )என்ற பெண் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த சூழலில் இவர்கள் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இதன் பின், இவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது.

கோமதிக்கு தினேஷ்(வயது 10) மற்றும் கந்தசாமி (வயது 9) 2 மகன்கள் உள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் பற்றி  கோமதியின் சகோதரியான சரசுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக அவரின் சகோதரி கோமதியை கண்டித்துள்ளார். ஆனால் கோமதி அவரின் பேச்சை கேட்காமல், சகோதரியை அவமானப் படுத்தி உள்ளார். கோமதியின் இந்த நடத்தையாலும் ,அவர் அவமானப்படுத்தியதை எண்ணி மனமுடைந்த சரசு தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக அவரின் உறவினர்கள்   ,கோமதி மற்றும் சேகரை அழைத்து எச்சரித்தனர்.இதனால் அவர்கள் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவர்கள் இருவரையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவர்கள் இருவரையும் தேடியுள்ளனர். அப்போது , பாப்பாரப்பட்டி ஏரி பகுதியில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, இறந்த இருவரும் கள்ளக்காதலர்களான  கோமதி மற்றும் சேகர் என்பது தெரியவந்தது.

இதுவே போலீசார் இருவரின் உடலை எடுத்துக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் இருவரும் தங்கள் கைகள்  இரண்டையும் கட்டிக் கொண்டு ,ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர், என்பது விசாரணையில் தெரிந்தது. எனவே இந்த வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர் .

Categories

Tech |