Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி: கலவரத்தின்போது பள்ளியிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் ஒப்படைப்பு.!!

கள்ளக்குறிச்சி பள்ளியில் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட பொருட்களை ஊர் மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி பள்ளி முன்பாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. மேலும் பல காவலர்களும் இதில் காயமடைந்தனர். இதில் பள்ளியில் உள்ள பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. குறிப்பாக பள்ளி பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அங்கு பயன்பாட்டில் வைக்கப்பட்டுள்ள மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் பள்ளியில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் ஃபேன், ஏ.சி, ஆர்.ஓ வாட்டர் பில்டர் உள்ளிட்ட பல பொருட்களை, அதாவது தங்கள் கைக்கு என்னென்ன கிடைக்கிறதோ அதை எல்லாம் திருடி செல்ல வேண்டும் என்ற நோக்கில் வன்முறையில் ஈடுபட்ட ஒரு சில நபர்கள் அதையெல்லாம் தூக்கி சென்றுள்ளனர்.. தூக்கி செல்லும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.. அதேநேரம் காவல்துறையினர் துரத்தும் போது எடுத்துச் செல்ல முடியாமல் ஆங்காங்கே சுற்றி வீசியும் சென்றுள்ளனர்.. இந்த கலவரத்துக்கு பின்பாக அவ்வாறு வீசி செல்லப்பட்ட பொருட்களை சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய கிராம மக்கள் பொதுமக்கள் சிலர் வீட்டில் வைத்துள்ளனர்.

இந்தநிலையில் பள்ளியிலிருந்து எடுக்கப்பட்ட அந்த பொருட்கள் அனைத்தையும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தங்கள் வீட்டில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்றும், திரும்ப ஒப்படைத்து விட வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுத்தனர். இந்த சூழ்நிலையில் கனியாமூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 கிராமங்களை சேர்ந்த ஊர் பெரியவர்கள் அங்குள்ள பொது மக்களிடம் ஒவ்வொரு வீடாக சென்று பள்ளியில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து அந்த பொருட்களை சேகரித்து கனியாமூரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்பகொட்டா பகுதியில் இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் திடலில் வைத்துள்ளனர்.

அங்கு நிறைய மேசை, நாற்காலிகள், பாத்திரங்கள், கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் இருக்கிறது.. இதை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி முறையாக பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் இந்த ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர நிறையபேர் பைக்கில் வைத்து மேஜை உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்றுள்ளனர்.. எனவே மேலும் இதுபோன்று மேற்கொண்டு ஏதாவது பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்களும் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சேகரித்து வருகிறார்கள்.

 

https://twitter.com/Thisistamil_/status/1548890817724485632

Categories

Tech |