Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது… கைவரிசை காட்டிய 3 வாலிபர்கள்…. அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!

சின்னசேலம் அருகே கணியம்பூர் சக்தி மேல்நிலைப்பள்ளி கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற கலவரம் பற்றி டிஜிபி பிரவீன் குமார் அபினவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு  பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைதாகி  இருக்கின்றனர். மேலும் வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஆதாரத்தை கொண்டு தொடர்புடைய நபர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த சூழலில் கணியாமூர் கலவரத்தின் போது பள்ளி வளாகத்தில் உள்ள மாட்டுப் பண்ணை காவலாளியை மிரட்டி அங்கிருந்து பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை வைத்து பசு மாடுகளை திருடி  சென்ற சின்ன சேலம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த முனிய துறை மகன் பூவரசன், கல்லாநத்தம்  கிராமம் கோவிந்தன் மகன் மணிகண்டன், முத்து மகன் ஆதிசக்தி போன்ற மூன்று வாலிபர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |