Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம்: “இதுவே காரணம்” அமைச்சர் எ.வ வேலு விளக்கம்…..!!!!!

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அந்த பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இதை கண்டித்து தமிழக முழுவதும் தனியார் பள்ளிகள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் எ.வ வேலு கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறைக்கு வாட்ஸப்பில் பரவிய தவறான தகவல்களே காரணம் என்று தெரிவித்துள்ளார். மாணவி மரணம் அடைந்த மறுநாளே அமைச்சர் சிவி கணேசன் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். போராட்டத்தில் மாணவர்கள் என்ற பெயரில் சிலர் கூடி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பள்ளியில் இருந்து சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன .கலவரத்தை தூண்டியவர்களை கண்டுபிடிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |