Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம் எதிரொலி!… இனி பள்ளிகள், ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு தனி சட்டம்?… அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதற்கிடையில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு பொதுமக்களும் மாணவியின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமின்றி கலவரத்தின்போது சம்மந்தப்பட்ட பள்ளிக்குள் சென்ற போராட்டக்காரர்கள் நாற்காலிகள், மேஜைகள் பள்ளி வாகனங்கள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினர். இதன் காரணமாக அந்த பள்ளியில் படித்த 4500 மாணவர்களின் சான்றிதழ்கள் தீக்கிரையாகியது. பள்ளி முழுதும் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் பள்ளி செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இல்லையெனில் வேறு பள்ளிகளில் கல்வியை தொடர வழிஏற்படுத்தி தரப்படும் எனவும் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது “பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வருவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு மேற்கொள்ளப்படும். அத்துடன் தனியார் பள்ளிகள் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக அதிகப்படியான மனஅழுத்தத்தை மாணவர்கள் மீது செலுத்துவதை கைவிட வேண்டும். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கலவரத்தை அடுத்து அரசு பள்ளிகளுக்கு மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை ஆகும். இதுபோன்ற சம்பவங்களானது தனியார் பள்ளிகளில் இனி  நடைபெறாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாக்க தனிசட்டம் முதல்வரிடம் ஆலோசித்து கொண்டுவரப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |