கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது பள்ளியில் இருந்து எடுத்து சென்ற பொருட்களை ஒப்படைக்கும்படி அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி எடுக்கப்பட்ட பொருட்களை தரவில்லை என்றால் போலீஸ் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கலவரத்தின்போது பள்ளியில் இருந்த ஏசி, கம்ப்யூட்டர், நாற்காலி போன்றவைகளை அப்பகுதி மக்கள் சிலர் எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாணது குறிப்பிடத்தக்கது.