Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சேதம்….. டிஎன்பிஎஸ்சி குரூப்-4….. புதிய தேர்வு இடம் அறிவிப்பு…..!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி வளாகத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் , சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் டூ மாணவி,  ஸ்ரீமதி கடந்த 13ஆம் தேதி பள்ளி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக tweeter,  whatsapp உள்ளிட சமூக வலைத்தளங்களில் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன.

நேற்று முன்தினம் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு பள்ளிக்கு முன்பு போராடி வந்தனர். மேலும் அங்கிருந்த பஸ்கள், வாகனங்கள் என அனைத்தும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அப்போது மாணவ, மாணவிகளின் சான்றிதழ்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு மையமானது தற்போது மாற்றப்பட்டுள்ளது. பள்ளியில் ஆய்வு செய்து வகுப்பறைகள் உபயோகப்படுத்தப்படும் நிலையில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இந்த பள்ளியில் குரூப் 4 தேர்வு எழுத 1200 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில் அந்த தேர்வு மையமானது கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி வளாகத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |