Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற… பெற்றோர் சம்மதம்…. அடக்கத்திற்கான ஏற்பாடு தீவிரம்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்து கொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற அனுமதி அளித்தது. மறு பிரேத பரிசோதனைக்கு 3 மருத்துவர்கள் கொண்ட குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் மாணவியின் உடல் மருத்துவர் ஆய்வு நடைபெற்ற முடிந்தது.

இதற்கிடையில் மறு பிரேத பரிசோதனை முடிவடைந்த மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர், உறவினர் தரப்பில் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. இதனையடுத்து போலீசார் மாணவி வீட்டிற்கு சென்று உடலை பெற்றுக் கொள்ளுமாறு நோட்டீஸ் ஓடினர். இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். பிற்பகல் ஒரு மணிக்கு ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை பெற்றுக் கொள்வதற்காக பெற்றோர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்னர் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாணவனின் சொந்த ஊரில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

Categories

Tech |