கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாலை மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் 17 வயது பள்ளி மாணவி இறந்தது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவு ,குற்ற புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. விழுப்புரம் குற்ற புலனாய்வு துறையினர் மேற்படி வழக்கும் விசாரணை மேற்கொண்டு மேற்படி இறப்பு தொடர்பான அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்..
இவ்வழக்கில் நியாயமான விரிவான விசாரணை நடைபெறுகிறது. இவ்வழக்கின் புலன் விசாரணையை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. சமூக ஊடகங்கள், பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்கள் இது சம்பந்தமாக அவரது சொந்த கருத்துக்களையும், அறிக்கைகளையும் காணொளி வாயிலாக வெளியிட்டும் இது தொடர்பான இணைய புலன் விசாரணை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்..
இது புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் அமையும். எனவே புலன் விசாரணை முன்னேற்றத்தில் பாதிக்கும் படி எந்தவித பதிவு மற்றும் வீடியோ காட்சிகளை காட்சி ஊடகங்களோ சமூக வலைதளங்களோ வெளியிட வேண்டாம் என்று வேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான நீதியை நிலைநாட்டவும், நியாயமான விசாரணையை மேற்கொள்ளவும் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பினை நல்கும் படி இந்த பத்திரிக்கை குறிப்பு கூறுகிறது. ஏதேனும் தனிநபரோ, நிறுவனமோ புலன் விசாரணையில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் அவருடைய வலைதள கணக்குகள் youtube சேனல்களை முடக்கவும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வழக்கு தொடர்பான யாருக்கேனும் ஏதேனும் தகவல் கிடைத்தால் குற்றப் புலனாய்வு உயர் அதிகாரியான 90038 48126 என்ற எண்ணுக்கு பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள் என்று பத்திரிக்கை குறிப்பு கூறுகிறது.