கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோரை முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்களிடம், “மகளை இழந்து தவிக்கும் உங்கள் நிலையை நினைத்து வருந்துகிறேன். கொரோனாவால் நேரில் வர முடியவில்லை. இந்த விவகாரத்தில் நிச்சயமாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”என்று உறுதி அளித்துள்ளார். நேற்று மாணவியின் தாய்,ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து மகளின் மரணத்திற்கு நீதி கேட்பேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் பள்ளியில் ஏற்பட்ட கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 69 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமினை வழங்கிய விழுப்புரம் மாவட்ட தலைமை முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா 10 மரக்கன்றுகளை நடவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.