Categories
மாநில செய்திகள்

“கள்ளக்குறிச்சி விவகாரம்”…. 2 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தோம்?…. மாவட்ட காவல்துறை மீது புகார்….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தினமும் இது தொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருந்தாலும், தமிழக அரசு உறுதியாக நடவடிக்கை எடுப்போம் என்று இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இதற்கிடையில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு பொதுமக்களும் மாணவியின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பள்ளி வாகனங்களை தீவைத்து எரித்தும், அலுவலகத்திலுள்ள சான்றிதழ்களுக்கு தீவைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். இவற்றில் காவலர்களுக்கும், கலவரக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அடிதடியால் பெரும்பாலானோர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை குறித்து 350 பேருக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வன்முறை சம்பவத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மாணவி இறந்த சம்பவத்திற்கு கலவரம் நடக்க வாய்ப்பு உள்ளதாக மாவட்ட காவல்துறைக்கு 2 நாட்களுக்கு முன்பே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் இந்த எச்சரிக்கையை மாவட்ட காவல்துறையானது பெரிதாக எடுத்துகொள்ளாமல் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த அலட்சியமே வன்முறைக்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் உளவுத்துறை கொடுத்த அறிக்கையை, சிறப்பு காவல் ஆய்வாளர் மாவட்ட எஸ்.பி.யிடம் உரிய முறையில் கவனத்திற்கு கொண்டு சென்றாரா என விசாரணை நடைபெற்று வருகிறது. இப்போது இவ்விவகாரம் மாவட்ட காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் இடையில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது.

Categories

Tech |