Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக் காதலனுடன் சென்ற பெண்…. குடும்பத்தினர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக் காதலனிடமிருந்து பிரித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பெருமாள் கோவில் தெருவில் மைதிலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 12 ஆண்டுகலுக்கு முன் மைதிலிக்கு திருமணம் ஆகியுள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும்  உறவினரான சரவணக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதனையடுத்து மைதிலியின் நடவடிக்கை அவர் கணவருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் அவர் மைதிலியை கண்டித்துள்ளார். எனவே மன உளைச்சலில் இருந்த  மைதிலி தனது கள்ள காதலனான சரவணகுமாருடன் சென்றுவிட்டார்.

அதன்பின் மைதிலியின் குடும்பத்தினர் அவரை சரவணகுமாரிடமிருந்து பிரித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இதனால் கள்ளக் காதலனிடமிருந்து தன்னை பிரித்த ஏக்கத்தில் வாடிய மைதிலி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மைதிலியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |