போலீசாரின் மனைவியை அவரது கள்ளக்காதலன் கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் கான்பூர் எனும் பகுதி அமைந்துள்ளது. இப் பகுதியை சேர்ந்தவர் இந்தர்பால், கீதா தம்பதியர். இந்தர்பால் மணிப்பூர் மாநில சட்டப்பேரவை பணிக்காக அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதியன்று இந்தர்பால் மனைவிக்கு மணிப்பூரில் இருந்து பல முறை போன் செய்துள்ளார். ஆனால் கீதா போனை எடுக்கவில்லை.
இதனால் இந்தர்பால் சந்தேகமடைந்து அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் அளித்து வீட்டு முகவரியை கொடுத்து உள்ளார். ஆனால் போலீசார் அங்கு போய் பார்க்கும் போது கீதா வீட்டில் இல்லை என்பது தெரிய வந்தது. இதை இந்தர்பாலிடம் போலீசார் தெரிவித்த உடன் அவர் அங்கிருந்து கிளம்பி வந்துள்ளார். இந்தர் பால் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது கீதாவின் போனில் கடைசியாக வந்த அழைப்பை பார்த்தபோது முத்தர் என்பவர் கடைசியாக பேசி இருந்தது தெரியவந்தது.
இவர் அதே பகுதியில் மெக்கானிக்காக வேலை செய்து வருபவர். இவருக்கு கீதாவிற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென கீதா வேறு ஒரு நபருடன் பேசியுள்ளார். முத்தர் கீதாவை கண்டித்து உள்ளார். ஆனால் கீதா கேட்காததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அப்போது சமாதானம் பேசலாம் என கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
இவருடன் வேறு இரண்டு நபர்களும் இருந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து கீதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து அங்குள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டு விட்டு சென்றதாகவும் அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும் இவருடன் காரில் இருந்து இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.