Categories
தேசிய செய்திகள்

கள்ளச்சந்தையில் விற்பனை குறித்து புகாரளிக்க…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.

அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள். அதனால் இதனை விற்பவர்கள் குறித்து 104 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம். மேலும், http://www.drugscontrol.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமும் கள்ளச்சந்தையில் மருந்து விற்பனை குறித்து புகார் அளிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |