Categories
தேசிய செய்திகள்

கள்ளச்சந்தை விற்பனை அதிகரிப்பு… “1 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு”… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கள்ளச்சந்தை விற்பனையானது சென்ற ஆண்டைவிட நடப்பு ஆண்டில் 23 விழுக்காடு அதிகமானதால் நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

கள்ளச்சந்தையில் விற்பனை செய்யக்கூடிய போலி பொருள்களை கண்டறியும் அங்கீகார தீர்வு வழக்குனர்கள் சங்கம், தற்போது சர்வதேச ஹாலோகிராம் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் இன்டர்போலின் கள்ள புலனாய்வு பணியகம் ஆகிய உலகளாவிய அலுவலர்கள் உடன் சேர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கள்ளச்சந்தையில் கள்ளநோட்டு முதலிடத்தை பிடித்திருக்கிறது. இது மக்கள் மத்தியில் மிகுந்த புழக்கத்தில் இருக்கின்றது. இதற்கு அடுத்தப்படியாக எஃப்.எம்.சி.ஜி, ஆல்கஹால், பார்மா, ஆவணங்கள், வேளாண்மை, வாகனம், புகையிலை, ஆடைகள் ஆகியவை  பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றால்  எஃப்.எம்.சி.ஜி துறையும் பெரும் பாதிப்படைந்துள்ளது.

சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 63 விழுக்காடு போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. உலகம் முழுவதும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை கள்ளச்சந்தை பெரிதும் பாதித்துள்ளது. சங்கத்தின் அறிக்கை படி, உத்தரப்பிரதேசம், பிகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பஞ்சாப், ஜார்க்கண்ட், டெல்லி, குஜராத் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் போலி விற்பனை அதிகளவு நடைபெற்று வருகிறது . உத்தரப்பிரதேசம் கள்ளச்சந்தையில் முதலிடம் வகித்து வருகிறது. விலை உயர்ந்த பொருள்களில் மட்டுமே போலியானவை இருக்கும் என்பதில்லை, சீரகம், கடுகு, சமையல் எண்ணெய், நெய், ஹேர் ஆயில், சோப்புகள், மருந்துகள் போன்ற மக்களின் அன்றாட தேவைகள் அனைத்திலும் போலியானவை இருக்கின்றன.

இது பற்றி அங்கீகார தீர்வு வழங்குநர்கள் சங்கத்தின் தலைவர் நகுல் பாஸ்ரிச்சா கூறும் போது, ” சென்ற 2018ஆம் ஆண்டை விட 2019ஆம் ஆண்டில் கள்ளச்சந்தை விற்பனை 24 விழுக்காடு அதிகரித்து இருக்கிறது. இதனால், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டில் பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாத இடையில் மட்டும், 150க்கும் மேற்பட்ட கள்ள வழக்குகள் பதிவாகி இருக்கின்றன, பெரும்பாலும் போலி பிபிஇ கருவிகள், சானிடிசர்கள், முகமூடிகள், கொரோனா காலத்தை பயன்படுத்தி கள்ளச்சந்தை மறைமுகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது” என்று குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Categories

Tech |