Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட தகராறு” கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

கணவர் மீது கொதிக்கும் வெந்நீரை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்கராஜுக்கும், அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் தங்கராஜ் தூங்கி கொண்டிருந்தார். அப்போது கோபத்தில் பிரியா கொதிக்கும் வெந்நீரை தனது கணவரின் மர்ம உறுப்பில் ஊற்றியுள்ளார். இதனால் அலறி துடித்த தங்கராஜின் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |