வேலூர்மாவட்டம், இடையகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(42). பாடகரான இவர் இசை கச்சேரி குழு நடத்தி வருகிறார். இவருக்கு மேரி என்பவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும் இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராஜா பொன்னை பகுதியில் மனைவிக்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து, சித்ராவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் குழந்தைகளையும், மனைவியையும் சித்ராவுக்காக விட்டுவந்ததை எண்ணி ராஜா மனமுடைந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார். தான் தற்கொலை செய்து கொள்வதை ராஜா தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். ராஜா தற்கொலை செய்துகொண்டதை தாமதமாக பார்த்த சித்ரா அதிர்ச்சியடைந்து அவரை கட்டித்தழுவி அழுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.