Categories
மாவட்ட செய்திகள்

கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த குழந்தை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்…!!!

கள்ளத்தொடர்புக்கு பெற்ற குழந்தை இடையூறாக இருந்ததால் தாயே குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை அருகே அபர்ணா என்ற பெண் வசித்து வருகிறார். இவரது கணவன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 வயது மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் தாமரைக் குளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த நட்பு காலப்போக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கணவர் வெளியூரில் இருப்பதால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் உல்லாசமாக இருக்கும் பொழுது குழந்தை அழுகிறது இதனால் கோபம் அடைந்த சுரேஷ் குழந்தையை அடித்துள்ளார். இதையடுத்து அபர்ணா துப்பட்டாவால் தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Categories

Tech |