அமெரிக்காவில் காவல்துறையினர் செய்த கொடூரக் கொலை வழக்கிற்கு அப்பகுதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் மினிசோட்டாவில் சார்ஜ் பிளைட் என்பவர் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த வருடத்தின் மே மாதத்தில் அப்பகுதியிலிருக்கும் கடையில் பொருட்கள் வாங்கியுள்ளார். அப்போது அவர் கொடுத்த பணத்தில் சுமார் 20 டாலர்கள் கள்ள நோட்டு இருப்பதாக காவல் துறையினருக்கு கடை உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் டெரிக் சாவின் தலைமையிலான 4 காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அதன்பின் டார்ச் பிளைட்டை இது தொடர்பாக விசாரிப்பதற்கு வாகனத்தில் ஏறுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் வாகனத்தில் ஏறுவதற்கு மறுத்ததால் காவல்துறை அதிகாரி ஜார்ச் பிளைட்டை கீழே தள்ளி தனது கால் முட்டியால் அவருடைய கழுத்தை அழுத்தியுள்ளார். இதனால் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் காவல்துறையினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை பணியிடை நீக்கமும் செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு மினிசோட்டாவிலிருக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததுள்ளது. அப்போது நீதிமன்றம் சார்ஜ் பிளாட்டை முட்டியால் அழுத்தி கொலை செய்த காவல்துறை அதிகாரியை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது அவருக்கு 40 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.