Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா” நெரிசலில் சிக்கி பலியான இருவர்…. மதுரையில் பரபரப்பு…!!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக தல்லாகுளம் கோரிப்பாளையம், செல்லூர் போன்ற பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நேரம் வந்ததால் கோரிப்பாளையம் பகுதியில் இருக்கும் மண்டகப்படிக்கு செல்லாமல் கள்ளழகர் வைகை ஆற்றை நோக்கி வந்தார். அப்போது ஒரே நேரத்தில் பொதுமக்கள் கோரிப்பாளையம் ஏ.வி பாலம் அருகே கள்ளழகர் இறங்கும் இடத்திற்கு செல்ல முயன்றனர்.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பெண்ணும், ஆணும் மூச்சு திணறி மயங்கி விழுந்து இறந்து விட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து காயமடைந்தனர். இவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்த ஒருவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பதும் மற்றொருவர் செல்லூர் பகுதியில் வசித்த ஜெயலக்ஷ்மி என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |