Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கள்ள நோட்டுகளை தயாரித்த இளைஞர்கள் 2 பேர் கைது …!!

ஈரோட்டில் கள்ள நோட்டுகள்  தயாரித்து புழக்கத்தில் விட முயன்ற இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

மாணிக்கம் பாளையத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் சௌந்தர் ஆகிய இருவரும் ஜவுளித் தொழில் செய்து வந்தனர். குறைந்த நாட்களில் அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டு அவர்கள் கலர் பிரிண்டர் இந்திரத்தை விலைக்கு வாங்கி ரூபாய் நோட்டுகளை பிரதி எடுத்து அதில் ஒளிறும்  ஸ்டிக்கரை ஒட்டி கள்ள நோட்டுகளை தயாரித்துள்ளனர். தள்ளுவண்டி கடை ஒன்றில் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்ற முயன்ற போது இரண்டு நோட்டுகளிலும் ஒரே எண் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து இருவரையும் பிடித்து விசாரணை நடத்திய போலீசார் அவர்களிடம் இருந்து 20 ஆயிரத்து 100 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பிரிண்டர் இந்திரம் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |