மீன் வாங்கி விட்டு தந்தை, மகன் இருவரும் கள்ள நோட்டை வியாபாரியிடம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக செல்வர். இந்நிலையில் ரீத்தாபுரம் பகுதியில் வசிக்கும் தந்தையும், மகனும் மீன் வாங்கிவிட்டு வியாபாரியிடம் பணத்தை கொடுத்துள்ளனர். அதில் ஒரு 500 ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் வியாபாரி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கள்ள நோட்டை மாற்ற முயற்சி செய்த தந்தை, மகன் இருவரையும் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் சுய உதவி குழுவிடம் இருந்து வாங்கிய பணத்தில் இந்த 500 ரூபாய் நோட்டு இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 500 ரூபாய் நோட்டை பறிமுதல் செய்து அவர்களது முகவரியை எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்துள்ளார்.