Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவங்க தான் கொடுத்தாங்க… அடுத்தடுத்த கேள்விகளால் திணறிய வாலிபர்…. வியாபாரிகளின் அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் மார்க்கெட்டிலுள்ள வியாபாரியிடம் கள்ள நோட்டு கொடுத்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளார். இந்நிலையில் பாலாஜி சேலம் கடை வீதிக்கு சென்று முருகன் என்ற வியாபாரியிடம்  12 தேங்காய் வாங்கி விட்டு அதற்கு 500 ரூபாய்  கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அந்த ரூபாய் நோட்டு மீது முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வேறு ரூபாய் கொடுக்கும் படி  பாலாஜியிடம் கேட்டுள்ளார்.  அதன் பின் மீண்டும் பாலாஜி கொடுத்த ரூபாய் நோட்டு மீது முருகனுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் முருகன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று பாலாஜியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது பாலாஜி சந்தையிலிருந்து  தான் இந்த ரூபாய் நோட்டுக்களை  வாங்கியதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் சந்தையிலுள்ள வியாபாரிகளிடம் விசாரணை செய்த போது  நாங்கள் கொடுக்கவில்லையென்று கூறியுள்ளார்கள். இதனால் போலீசார் கள்ள நோட்டு வைத்திருந்த பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |