Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கழன்று ஓடிய அரசு பேருந்து சக்கரம்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 47 பயணிகள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

திருநெல்வேலியில் இருந்து அரசு பேருந்து ஒன்று 47 பயணிகளை ஏற்றிக்கொண்டு கோயம்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை காமராஜ் (வயது 40) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து பேருந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடியுள்ளது. இந்த நிலையில் டிரைவர் பேருந்து ஒரு பக்கமாக சாய்ந்து போது தான் கழன்று ஓடியது நம்முடைய பேருந்தின் சக்கரம் என்பதை அறிந்துள்ளார்.

அதன்பிறகு சாமர்த்தியமாக பேருந்தை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நகர்த்தி வந்த டிரைவர் காமராஜ் சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதி பேருந்தை நிறுத்தியுள்ளார். இந்த விபத்தில் டிரைவரின் சாமர்த்தியத்தால் பேருந்தில் பயணித்த 47 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

மேலும் இந்த விபத்து பற்றி பயணிகள் கூறுகையில், அரசு பேருந்துகளில் பராமரிப்பு பணிகள் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. டிரைவரின் சாமர்த்தியத்தால் மட்டுமே நாங்கள் அனைவரும் உயிர் பிழைத்தோம். இனி இதுபோன்ற விபத்துக்கள் எதுவும் நடக்காத அளவிற்கு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |