திடீரென மயங்கி விழுந்து பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் காலனியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சம்பத்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல் அருகே இருக்கும் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழக விடுதியில் இருக்கும் கழிப்பறையில் சம்பத்குமார் திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாக சம்பத்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு சம்பத்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.