தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி மாணவர்கள் மது அருந்துவது, புகைபிடிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது 2 அரசு பள்ளி மாணவர்கள் பட்டப்பகலில் மது அருந்திவிட்டு. நடுரோட்டில் தள்ளாடும் சம்பவம் பார்க்கும்போதே அதிர்ச்சியாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களின் பெயர்கள், எந்த இடம் என்பது குறிப்பிடவில்லை.
பள்ளிகளில் மாணவர்கள் குறிப்பிட்ட சில குழுக்களால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக்கப்படுகின்றனர். ‘கூல் லிப்ஸ்’ என்ற சிறிய போதை பாக்கெட்டை வாயில் ஒதுக்கிய மாணவர்கள் தற்போது கஞ்சா பொட்டலங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. பலர் சிகரெட்டில் கஞ்சா அடைத்து, கழிப்பறைக்கு சென்று புகைக்கின்றனர். இந்த சிகரெட் ரூ.40 முதல் 50 வரை விற்கப்படுகிறது மாணவர்களை குறிவைத்து நடக்கும் கஞ்சா விற்பனையில்,
17 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்கள் பஸ் ஸ்டாண்டுகளை தேர்வு செய்து ஏதாவது ஒரு பள்ளியின் சீருடையை அணிந்து மாணவர்கள் போல் நடித்து மாணவர்களுக்கு கஞ்சா சபலத்தை துாண்டி போதை பாதைக்கு இழுக்கின்றனர். அந்த மாணவர்கள் உடன் படிக்கும் மாணவர்களையும் கெடுப்பதோடு கஞ்சா விற்பனை செய்யும் கும்பலுக்கு ஏஜென்ட்களாகவும் மாறுகின்றனர். மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.