Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கழிப்பறையை சுத்தம் செய்த மாணவி…. தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

பள்ளி மாணவி கழிப்பறையை சுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியரை அதிகாரி பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆனம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 206 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கழிவறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆர்த்தி மாணவியை யாராவது கட்டாயப்படுத்தி கழிவறையை சுத்தம் செய்ய சொன்னார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி அதிகாரிகள் மாணவியிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பாவதி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |