Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

கழிப்பறை இருக்கைகளை விட…. செல்போனில் 10% பாக்டீரியாக்கள் அதிகம்…. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்…..!!!!

டாய்லெட்டை விட செல்போனில் 10% பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பது அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாம் எங்கு சென்றாலும் அதாவது சமையலறை, கழிவறை, அலுவலகம் என செல்லும் இடங்கள் எல்லாம் செல்போனை எடுத்து செல்கிறோம். எனவே ஃபோனில் வைரஸ் தானே ஏறும். பாக்டீரியா எப்படி ஏறும்? என்று நாம் கேள்வி கேட்க வேண்டாம். பொது இடங்களில் போன்களை கீழே வைப்பதால், பாக்டீரியாக்கள் அதிகம் பரவுகின்றன.

கழிவறை இருக்கைகளை விட செல்போனில் 10 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதை அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது சாதாரண கழிப்பறை இருக்கைகளை விட 10 மடங்கு அதிகம் என்றும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்கள். குறிப்பாக, தற்போதைய இளம் வயதினரின் போன்களில் 17,000 பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இதை தடுக்க மாதம் ஒரு முறை போன்களை சுத்தம் செய்யும் கிருமிநாசினியை பயன்படுத்துவது நல்லது.

Categories

Tech |