இந்தியாவில் 19 சதவீதம் பேர் கழிப்பறை வசதி இன்றி வாழ்வது தேசிய குடும்ப நல துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை என்பது மிகவும் முக்கியமான விஷயம். இதற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தூய்மை இந்தியா என்ற பெயரில் அனைத்து வீட்டிலும் கழிப்பறை கட்டாயமாக்கப்பட்டு அரசு சார்பிலும் கழிப்பறைகள் கட்டுவதற்கு மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது தேசியக் குடும்ப நலத்துறை சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் இந்தியாவில் 19 சதவீதம் பேர் கழிப்பறை வசதி இன்றி வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. 2015ஆம் ஆண்டு 39% இருந்த கழிப்பறை இல்லாத வசதி 2021ல் 19 சதவீதமாக குறைந்துள்ளது. ஒடிசாவில் 77%, ஜார்க்கண்டில் 70%, பீகாரில் 62% கழிப்பறை வசதிகள் இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதேசமயம் நகர்ப்புறங்களில் 11 சதவீத குடும்பத்தினர் பிற குடும்பங்களுடன் கழிப்பறையை பகிர்ந்து பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.