25 கிலோ எடையுடைய மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்காக அருகே கழிவறை கட்டுவதற்காக குழி ஒன்றை தோண்டியுள்ளார். நேற்று காலை மலைப்பாம்பு ஒன்று குழிக்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பழனிவேல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 12 அடி நீளமுடைய மலைப்பாம்பை பிடித்தனர். இதன் எடை 25 கிலோ ஆகும். இதனை அடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட மலைப்பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.