Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கழிவறைக்கு சென்ற பெண் …. கடித்துக்குதறிய விலங்குகள் …. அச்சத்தில் பொதுமக்கள் ….!!

காட்டு பன்றிகள் பெண்ணை  கடித்து குதறிய    சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் பாண்டி -ஆறுமுகம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆறுமுகம் காலை நேரத்தில்  அதே பகுதியில் இருக்கும் பொது கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கூட்டமாக நின்ற காட்டுப்பன்றிகள் ஆறுமுகத்தை கடித்து குதறியுள்ளது . இதனையடுத்து ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள்  பன்றிகளை  விரட்டியடித்து  படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டனர்.

அதன்பின்  படுகாயமடைந்த ஆறுமுகத்தை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து   நகராட்சி நிர்வாகத்திடம் மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் காட்டு பன்றிகளை பிடித்து வனப்பகுதிகளில்   விட வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |